Friday, January 02, 2009

சூரியனை மறைக்கும் மரங்கள்


இந்த மரங்கள் என்னை சூரியனை மறைக்கின்றனவா? அல்லது
சுட்டெரிக்கும் ஒளியிலிருந்து என்னை காக்கின்றனவா?

Thursday, January 01, 2009

கோபுரத்தை கைக்குள் அடக்கும் முயற்சி !


அப்படி இப்படி நெளிந்து வளைந்து செல்லிடப்பேசிக்குள் அடக்கி பிரதி எடுத்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு.
கோபுரம் இன்னும் உயர்ந்து தான் நிற்கிறது ;)


ஆனாலும் என் மகிழ்ச்சி எனக்கு.

என்னிடமே சில புதுவருட கேள்விகள் (2009)

1. இந்த வருடம் முடிவில் என்ன கேள்விகளை கேட்பேன்?
2. 2 வருடங்களுக்கு முன்னரான சுனாமி மறந்து விட்டது. சென்ற மாத மும்பாய் தாக்குதலும் மறந்துவிட்டது. 2009 முடிவில் என்ன நினைவில் நிற்கும்?
3. 2009ல் உலகம் எப்படி எல்லாம் மாறும்?
4. எந்த நாடு சூடாகும்? எந்த நாடுகள் கூலாக இருக்கும்?
5. 2009ன் ஒபாமா யாராக இருக்கும்? ஏன்?
6. ஈழம், இலங்கை, தமிழ்நாடு, இந்தியாவில் என்ன மாற்றங்கள் வரும்?
7. தமிழ் வலைப்பதிவுகளில் என்ன புதுமை புகும்?
8. எம்மை சுற்றியுள்ள உறவு/எம்மை பாதிக்கும் வட்டத்தின் விட்டம் என்ன?
9. எப்படி என்னை/யாருடன் 2009ல் அடையாளப்படுத்திக்கொள்வது?

திடீரென கிளம்பும் பதிவு பிரச்சனைகள் 2009ல்- இப்பொழுதே சொல்லலாம் - அது நிரந்தரம்.

Saturday, July 05, 2008

http://lathananthpakkam.blogspot.com/2008/07/blog-post_05.html

1. கேள்வி கேட்க ஆள் இல்லாவிட்டால், நீங்களே உங்களை கேள்வி கேட்பீர்களா?

2. பதிவில் போடுவதற்கு படங்கள் முடிந்துவிட்டால், படமெடுத்து பதிவீர்களா? படமில்லாமல் பதிவீர்களா?

3. என்ன வகை கணணி வைத்திருகிறீர்கள்?

4. வலையுலகுக்கு வராவிட்டால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்? [எண்ணை தேய்த்துக் குளிப்பது தவிர!]

5. வலை பதிவதால் இழந்தது என்ன? பெற்றது என்ன? [வலை நட்புக்கள் என்ற template பதில் தவிர]

Sunday, August 12, 2007

நான் சொன்னது என்ன? http://jannal.blogspot.com/2007/08/blog-post_11.html

அதிக நேரம் உங்களுக்கு இல்லாதிருப்பதால் சில கேள்விகள் மட்டும் [நேரம் இருப்பின் சொல்லுங்கள், உண்மையான, முழுமையான பட்டியலுடன் வருகிறேன் ;) ]
[கேள்விகள் உங்கள் இந்தப்பதிவிலிருந்து மட்டுமே]

1. ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!
இது எம் தாய் நாடு இந்தியாவினை விமர்சிப்பதாக கொள்ளலாமா? வருங்கால வல்லரசின் பெயரை கெடுப்பதாக சொல்லலாமா?

2. எமக்கிடையில் [நானும் மனிதன் தான்;) ] உள்ள முரண்பாடுகள் - விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதா?
[எனக்கு அமெரிக்காவில் வெறுப்பு....ஆனால் இப்போதுதான் mcdonaldsல் சாப்பிட்டேன். ;) ]

3.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரச்சினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு


என்னை பொறுத்தவரை வலைப்பதிவு வாசகன் மட்டுமே தான் வசிப்பதை தெரிந்தெடுக்கிறான்.[பதிப்பு/ தொலைக்காட்சி போலல்லாது ]
திரட்டி ஒரு தற்காலிக வடிவம்/கருவி. ஒத்த பண்புள்ள பதிவுகளை [இங்கு தமிழ்! ] திரட்டுவது மட்டுமே [வேண்டுமென்றால் பதிவுகளுக்கு கொஞ்சம் நிறம் தீட்டலாம் ;) ]. நான் எனது சொந்த திரட்டியையும் மிக இலகுவாக உருவாக்கலாம். விருப்பமானால் அதில் நீல/பச்சை/மஞ்சல் இடுகைகளை மட்டும் சேர்க்கலாம். ;)

google search resultsல் உங்களுக்கு தேவைபடாததை சும்மா விட்டு விடுவதில்லையா? அல்லது எனக்கு தேவையானதை மட்டும் தேவையான போது மட்டும் வலையிட உலகை கேட்கலாமா?
[உண்மையில் அன்னப்பறவை பால் பிரித்து குடிக்காவிடினும்] அன்னம் போலல்லாது நல்லவற்றை வலைகளில் பிரித்தல் இலகு.
வசிப்பவரை அடையவைப்பதுடன் திரட்டியின் பணி முடிகிறது. இப்போது இங்கே நான் வந்தது திரட்டிவழி அல்ல.
இணைய கலாச்சாரத்தை பதிப்புலக கலாச்சாரமாக கருத முடியுமா? நான் எழுத்து/ இலக்கண/கருத்து பிழையுடன் எழுதி திரட்டி திரட்ட முடியாதா?
அதற்காக திரட்டி என்னை வலை உலகிலிருந்து திரத்த வேண்டுமா? திரட்டிக்காக தான் வலைநெறியா?


4. 10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.

நீக்கள் உடை உதாரணம் எடுத்ததால் மட்டும் - நிர்வாண பூக்காக்களுக்கு / topless கடற்கரைகளுக்கு போயிருக்கிறீர்களா? அந்த உலகில் உடை கட்டுபாடுகள் இல்லை. இணைய உலகில் இல்லாத சிலவற்றைப் போல.
அந்த உலகை எமது நெறிமுறைகளுக்கு உட்படுத்த முடியாதது போல, வெள்ளையரை வேட்டி கட்டி மணமுடிக்கவைக்க முடியாததுபோல, வலையுலகை பதிப்புலக நெறிமுறைகளுக்கு உட்படுத்த முடியுமா?
[ ஒரு அறைக்கு உள்ளேயான நெறி, அறைக்கு வெளியே வேறுபடுவதைப் போல]
இணையத்தில் எத்தனை வீதம் நெறிகளுக்குட்பட்ட விடையக்கள் உள்ளன?

5. இலங்கை பிரச்சனையில் மாற்றப்படமுடியாத உங்கள் நிலை தெரிவதால் - பரிதாபப்படுவதை தவிர ஒரு கேள்வியும் இல்லை.
வலையில் நெறிபட எழுதி பின்னோட்டங்களுக்கும் பதிலளிக்கும் வலி எனக்கில்லை - அகதியாய் அலையும் வலையைபோல [not in comparable terms] . அதனால் அதை பற்றி கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
நான் அறிந்திருப்பதை பிழை என்று யாரும் சொன்னால் - நான் அது ஏன் பிழை என்றுசொல்கிறார்கள் என அறிய முயல்வேன். அப்படி மற்றவர்களும் இருக்கவேண்டும் என நான் நினைப்பது தவறா? அல்லது நான் நினைப்பதை மற்றவர்கள் மீது அழுத்துகிறேனா?

Saturday, August 11, 2007

http://jannal.blogspot.com/2007/08/blog-post_11.html

commenter said...
"என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி."

என்று சொன்னது நான் இல்லை.

அது நீங்களும் இல்லை என்றால் சொல்லுங்கள் -நம்பிக்கையை கை விட்டு - நீண்ட பட்டியல் தருகிறேன்.


5:36 PM

Tuesday, August 01, 2006

http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_27.html

http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_27.html

சரியோ பிழையோ ..நீங்கள் சில விடயங்கள் சிறப்பாக விவாடிப்பதாக நான் கருதுவதாலும், இங்கு பொருட்பிழை இருப்பதாலும் சுட்டிகாட்டவேண்டும் போல இருந்தது. அதனால் மட்டும்....

[இங்கு பல விடயங்கள் பொதுமைப்படுத்தப்பட்டதால் எனக்கு அப்படி ஒரு புரிதலோ தெரியவில்லை!]



/**தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.
**/

** அமேரிக்கா இராக் மீதான ஆரம்பத்தாக்குதலில் விமானத்தாக்குதல் நடத்தியது நாட்டு எல்லையில் போர் நடத்தவா?
** போர் / எதிரி என்று வந்துவிட்டால் தாக்குதல் எப்படியும் இருக்காலாம். (என்று போரியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;)
** விடுதலைபுலிகளை பொறுத்தவரை பெரும்பாலும் ராணுவ இலக்குகளே தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது. (பெரும்பாலும் என்று escape clause இருப்பது எவ்வளவு வசதி)
**


2. மூளைச்சலவையால் சாத்தியமானவை பல இருக்கிறது. நாட்டுப்பற்று/ இனப்பற்று .etc.
இந்தியாவுக்கு 2012 ஒலிம்பிக்ஸ்ல் தங்கம் கிடைக்கப்போவது ஒருவகை மூளைச்சலவையால் [என்று மானிடவியலாளர் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். ]
[He knows that if he runs people will be happy. he does not know the impact it has on his body - telegraph 23/07/2006]


3. தற்கொலைப்படை என்ற வலிமையான ஆயுதம் அளவுக்கு மிக அதிகமாக பவிக்கப்படுவதாக ( ஆயுதம் வைத்திருப்பவர்களால்) - [ஆயுத விற்பனர் சொல்கிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;) ] .

4. செயின் ரியாக்சன் - [தமிழில் தலைப்பு கொடுத்தால் என்ன? ] - செயின் ரியாக்சனின் ஆரம்பம் என்ன?
க்ரீன் வாங்கிய அடி அமெரிக்கவில் ஒரு சமூக/ குடும்பப் பிரச்சனையால். அவனால் பாதிக்கப்பட்டது எங்கோ இருந்த அகமது. உலகம் இயங்குவது இப்படிப்பட்ட chain reaction ஆல் தான் (என்று ... ) . தற்கொலை தாக்குதலுக்கும் chain reaction என்ன special தொடர்பு?


5. /**ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி. **/

9/11 தற்கொலை தாக்குதலின் பின் அமேரிக்காவில் இருந்து எத்தனை தற்கொலை தாக்குதல் உருவானது?

இல்லை ... தற்கொலை தாக்குதலின் chain reaction வேறுவகையாய் இருக்குமென்றால், தற்கொலையை தூண்டியது எது?

6. தற்கொலைத்தாக்குதல்க்காரர் தம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்துவதால்தான் தான் அவர்களால் "அதை" செய்ய முடிகிறது. அது கலாச்சாரத்துடனும் இணைந்தது (என்று ... ) . UK ல் இருந் து இஸ்ரேல் சென்று தாக்கியவர்களும்/ லண்டன் தாக்குதல் நடத்தியவர்களும் பாக்கிஸ்தானிய மூலம் கொண்டவர்கள்.

7. ஏனோ சியாச்சின் ஞாபகம் வருகிறது.
தாக்குதலின் பின் தப்புவதற்கு 37% க்கு குறைவாக வா́ய்ப்பு இருந்தால் மட்டும் அது தற்கொலை தாக்குதலா?


8. கொலைகள் செய்வது Vs எனது உயிர் உட்பட கொலைகள் செய்வது - உயிர்வலியை எல்லோருக்கு இருக்கும்.

9. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வெளியே மழை. மெதுவாக காற்றும் வீசுகிறது. நான் இங்கு எழுதுவதை எனது சூழல் நிர்ணயிக்கிறது. மழை நீருக்கு பதில் குண்டு விழுந்தால் நான் என்ன செய்வேன்? [தற்கொலைத்தாக்குதல் செய்யமாட்டேன்!]


பிகு:
எனக்கு முகம் இல்லாததில் ஒரு வசதி. யாரும் என்னை கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல தேவையில்லை. கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

-பிடி

Thursday, July 13, 2006

கூவத்தில்


அழுக்காய் ஓடும் கூவத்தில் வெளுத்தாலும் வெள்ளை வேட்டியில் அழுக்கு போகுமா? Posted by Picasa

இரயில் பயணங்கள் முடிவதுண்டு




இரயில் பயணங்கள் முடிவதுண்டு
மீண்டும் ஆரம்பமாவதற்காய்
நாளை இந்த ரயில் இருக்கும், கூட்டமும் இருக்கும்
பத்திரிகை மட்டும் புதிதாய் இருக்கும்

Posted by Picasa